Friday 13 July 2012

ப.சி- உனக்குத் தெரியுமா பசி:

அத்தியாவசிய பொருள்களின் விலை தினமும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அதை கட்டுப்படுத்த இந்த துப்புக்கெட்ட மன்மோகன் அரசுக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால் செல்வச் சீமான் ப.சிதம்பரமோ 15 ரூபாய் தண்ணீர் பாட்டிலுக்கும், 20 ரூபாய் ஐஸ்கிரீமுக்கும் செலவழிக்கும் மக்கள் 1 ரூபாய் அரிசிக்கும், கோதுமைக்கும் அதிகமாக செலவழிக்கத் தயங்குவது ஏன் என்று கேட்கிறார். 1 ரூபாய் விலையேற்றம் விவசாயிகளுக்குப் போய்ச் சேர்கிறதா அல்லது இடைத் தரகர்களுக்குப் போய் சேர்கிறதா என்று தெரியுமா ப.சி.  வறுமைக் கோட்டின் உச்ச வரம்பு 32 ரூபாய். 32 ரூபாயை ப.சி, மன்மோகன், அலுவாலியாக் களுக்கு  கொடுத்து  வாழச்  சொல்ல வேண்டும்.  இந்த வெட்கம் கெட்ட UPA அரசுக்கு பாடம் புகட்ட இப்போது இருந்தே தயாராவோம்.

      

2 comments:

  1. ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரத்தில் அதிர்ந்து போவாயானால் நீ எனது தோழன்--சேகுவாரா

    ReplyDelete
  2. பனா சீனா செட்டி நாட்டுக்கோமான் என்ற தொனியில் பேசித்திரிகிறார். அம்பானி சகோதரர்கள் இடையே பிரச்சனை என்றால் இவருக்குத்தூக்கம் வர மாட்டேன் என் கிறது. திவாலாகிப்போன என்ரான்என்ற பன்னாட்டு மின்சாரக்கம்பெனிக்காரனுக்கு ஆதரவாக ஆஜராவார். இவருடைய வழித்தோன்றல்கள் மல்லையாவுக்கு வக்காலத்து வாங்குவார்கள்.

    ReplyDelete