Monday 23 July 2012

13 வது குடியரசுத் தலைவர்

       இந்திய திருநாட்டின் 13 வது குடியரசு தலைவராக திரு பிரணாப் முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குடியரசு தலைவர்  தேர்தலில்  மாண்புமிகு சட்டமன்ற, பாரளுமன்ற உறுப்பினர் போட்ட வாக்குகளில் 81  வாக்குகள் செல்லாதவை.இதில் சமாஜ்வாடி ஜனதா கட்சியின் தலைவர் முலயாம் சிங் யாதவின் வாக்கும் அடக்கம். இனி நாடு அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு சுபிட்சம் அடையப் போகிறது என்று நாம் நம்பினால் நம்மை விட ஏமாளிகள் இருக்க முடியாது. பிரதம மந்திரியாக ஆகிவிடலாம் என்று கனா கண்டு அது முடியாமல் போக குடியரசுத் தலைவர் வாய்ப்பு கிடைத்துள்ளது. ராகுல் காந்திக்கு ஒரு போட்டியாளர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

      நாட்டின் மிகப்பெரிய முதலாளிகளின், பண முதலைகளின் ஆலோசகராக இருப்பவரிடம் நாம் எதையும் எதிர்பார்க்கமுடியாது.

        முன்னால் குடியரசுத் தலைவர் திருமதி.பிரதிபா பாட்டீல் தனது ஐந்து ஆண்டு பதவிக்காலத்தில் இன்ப சுற்றுலாவுக்காக 205/- கோடி ரூபாய் மக்கள் பணத்தைச் செலவழித்துள்ளார். திரு. பிரணாப் முகர்ஜி அதனை மிஞ்சி நிச்சயம் சாதனை படைப்பார் என்பதில் சந்தேகமில்லை. 

       அடுத்ததொரு சிறந்த ரப்பர் ஸ்டாம்ப் குடியரசுத் தலைவர். இவரது மாதச் சம்பளம் 1,50,000/-. 200 வேலையாட்கள். நினைத்த நேரத்தில் பறக்க விமானம் மற்றும் இன்னும் ஏராளமான சலுகைகள். இந்த ரப்பர் ஸ்டாம்ப் குடியரசுத் தலைவர் நாட்டுக்குத் தேவையா?.

         

       


3 comments:

  1. குடியரசுத்தலைவர் தேர்தல் எவ்வளவு எளிதாக இருக்கிறது?.அனைத்துக்கட்சிகளும் ஒன்று பட்டு (!) வெற்றி வாய்ப்பு இருப்பவருக்கென்றும் மெனக்கெட்டு (சர்வதேசீயம் பேசும் கட்சிகளும் இதில் அடக்கம்)
    அலைந்தார்கள். இது போன்ற ஒரு நீக்குப்போக்குத்தன்மை அசாதாரணமாகக்கூட மாநிலத்தேர்தல்களில், பாராளுமன்றத்தேர்தல்களில் எதிரொலிப்பதில்லை. காரணம் நீங்கள் சொன்ன "ரப்பர் ஸ்டாம்ப்"தானோ

    ReplyDelete
    Replies
    1. உங்களது கருத்துக்கு மிக்க நன்றி நாராயணன்

      Delete