Wednesday 18 July 2012

டாஸ்மாக்கும், இலவசமும்:

      தமிழக மக்கள் தொகை                        - 7 கோடி
      குடிப்போர் எண்ணிக்கை                       - 1 கோடி 
      தினமும் குடிப்போர் எண்ணிக்கை       - 49 இலட்சம்
                                    (13 வயது சிறுவர்களும் அடக்கம்)         

           தினமும் குடிப்போர் ஒரு நாளைக்கு ரூ.100/- வீதம் ஒரு மாதத்திற்கு ரூ.3600/-, வருடத்திற்கு ரூ.36000/- மற்றும்  5வருடத்திற்கு ரூ.1,80,000 செலவழிக்கின்றனர். ஆனால் இந்த அரசிடமிருந்து இலவசமாய் பெறுவது ரூ.3500/- மட்டுமே ( மிக்சி,  கிரைண்டர், மின் விசிறி). இதோடு உடல் நல குறைவு ஏற்பட்டு மருத்துவச் செலவு தனி. குடிப்பழக்கத்தால் சீரழிந்த குடும்பங்கள் எராளம்.

         இந்த அரசாங்கத்தால் மக்களுக்கு நல்ல குடிநீர் வழங்க முடியவில்லை. ஆனால் சாராயம் தங்கு தடையின்றி கிடைக்க அனைத்து வழிமுறைகளையும் செய்கிறது. 

         மக்களுக்கும் மின் கட்டணம், பேருந்து கட்டணம்,பால் விலை உயர்வு பற்றி கவலையில்லை. சிறு முனு முனுப்பு கூட இல்லை. 

        ஆண்கள் கூட்டம் டாஸ்மாக்கில், பெண்கள் கூட்டம் கோவில்களில்.

       நாம் எங்கே சென்று கொண்டு இருக்கிறோம். சிந்திக்க வேண்டிய தருணம் இது .                                         

1 comment:

  1. "வால் மார்ட்" சாம் வால்ட்டன் பாணியில் அருமையான ஒரு தகவலைக் கொடுத்துள்ளீர்கள். ஆனால் சிந்திப்பதற்குத் தான் ஆள் இருப்பதாக தெரியவில்லை.

    ReplyDelete