Tuesday 8 January 2013

மன்மோகன் சிங்-மெடிக்கல் செக்கப்

கண்கள்:-  எந்தெந்த மானியத்தையெல்லாம் வெட்டலாம் என்பதையே  
                     பார்த்துக் கொண்டிருக்கிறது

கைகள்:- பத்து நிமிடத்து மேல் பேசினால் மணியடிக்கத் துடிக்கிறது.

காது     :- ஏழைகளின் புலம்பலைக் கேட்பதே இல்லை.

நாக்கு  :- உதடுகளுக்குள் சிறைப்பட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது.

கழித்து:- சோனியா காந்தி சொன்னதற்கெல்லாம் ஆடியதால் தளர்ந்து 
                  கிடக்கிறது.

மூளை:-  மக்களைப் பற்றி சிந்திப்பதை  மறந்து  ரொம்ப நாள்  
                   ஆகிவிட்டது.

கால்கள்:- நினைத்தபோதெல்லாம் வெளிநாடுகளுக்கு ஓடுவது.

பி.பி.:-  அடுத்த  பொதுத் தேர்தலைப்  பற்றி  நினைக்கும்போதெல்லாம் 
               எகிறுகிறது.

இதயம்:- பணக்காரர்களுக்காகவும், தொழிலதிபர்களுக்காகவும்
                  மட்டுமே  துடித்துக்கொண்டிருக்கிறது.

                                                          ( நன்றி- குமுதம்)

Monday 7 January 2013

தேசிய அவமானம்


புது தில்லியில் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளான 23 வயது மருத்துவ மாணவிக்கு ஆதரவாக நடந்த போராட்டக்காரர்களை அமைதிப்படுத்த தொலைக்காட்சியில் தனது  பேச்சில் இது ஒரு தேசிய அவமானம் என்று பிரதம அமைச்சர் மன்மோகன் கூறினார். ஓடும்  பேருந்திலிருந்து நிர்வாணமாக சாலையில் தூக்கி வீசி எறியப்பட்ட அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிர் துறந்தார். தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை வாயிலாக உலகுக்கு செய்தி தெரிந்தது.இது போல் தினமும் நடக்கும் நிகழ்வுகள் வெளியில் தெரிவதில்லை.

600 ரூபாய் இருந்தால் 5 பேர் கொண்ட குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு போதுமானது என்று கூறிய புதுதில்லி காங்கிரஸ் முதல்வர் க்ஷீலா  தீக்க்ஷித்தின்  அடாவடிப் பேச்சு ஒரு தேசிய அவமானம்  தான். 

9 நாட்கள் இந்தியாவில் இருந்தால் ஒரு நாள் வெளிநாடு சுற்றுப்பயணம்.ஒரு நாள் செலவு ரூபாய் 2 லட்சம். நாட்டில் கழிப்பறை வசதியில்லாத எத்தனையோ மக்கள் இருக்க திட்ட  கமிசன்  அலுவலகத்தில் 35  லட்சம் செலவில் கழிப்பறை வசதி. இவையனைத்தும் மக்கள் வரிப்பணத்தில். ஆடம்பரமாக மக்கள் வரிப்பணத்தை செலவழிக்கும் மாண்டேக் சிங் அலுவாலியா வறுமைக் கோட்டின் உச்ச வரம்பு 32 ரூபாய் என்று நிர்ணயம் செய்து மக்களை இழிவு படுத்திய செயலும் ஒரு தேசிய அவமானம்  தான்.

இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்த நடுவன் அரசு பன்னாட்டு பகாசூர கம்பெனிகளுக்கும், அமெரிக்க ஏகாதிபத்திய அரசுக்கும் சேவகம் செய்யும் செயலும் ஒரு தேசிய அவமானம்  தான்.

ஊழல் மேல் ஊழல் செய்து நாட்டின் வளங்களை கொள்ளையடித்த காங்கிரஸ் கட்சி இன்னும் ஆட்சியில் நீடிப்பதுவும் ஒரு தேசிய அவமானம்  தான்.

பன்னாட்டு மூலதனத்தின் பலாத்காரத்திற்கு நாட்டையே தள்ளிவிட்ட இந்த அரசின் வெட்கக்கேடான செயலும் ஒரு தேசிய அவமானம்  தான்.

மின்சாரப் பற்றாக்குறையால் விவசாயத்தில் சீரழிவு, தொழிற்சாலைகளில் பேரழிவு, வருடா வருடம் சாராய விற்பனை நிர்ணயத்த இலக்கை விட அதிகம் விற்பனையாகி சாதனை மேல் சாதனை. காமராஜர் படிக்கச் சொன்னார். இப்போது உள்ள ஆட்சியாளர்கள் குடிக்கச் சொல்கிறார்கள். இது பெரிய தேசிய அவமானம்.